Header Ads

Bigg Boss 2 Tamil : பிக்பாஸ்2 டைட்டில் வின்னர் யார்?: வாக்கு நிலவரம்

பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் பெற்ற வாக்குகளை நிகழ்ச்சிக் குழுவினர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் யாஷிகா, பாலாஜி வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேர் மீதமுள்ளனர். இவர்களில் ஜனனி இறுதிச் சுற்றுக்கான டிக்கெட்டை பெற்றுள்ளார். 4 பேரில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் பிக்பாஸ் 2 டைட்டிலை பெறுவார்.



அதன்படி, மக்கள் அளித்த வாக்குகளை அவ்வப்போது நிகழ்ச்சிக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ரித்விகா முதலிடம் வகித்து வருகிறார். இரண்டாம் இடத்தில் 7 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளார் ஐஸ்வர்யா. மூன்றாம் இடத்தில் விஜயலட்சுமியும், கடைசி இடத்தில் ஜனனியும் உள்ளனர்.


இந்நிலையில் ரித்விகா, ஐஸ்வர்யாவிற்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மக்கள் வாக்களிக்கத் தொடங்கிய முதல்நாளே ரித்யாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. இருப்பினும் டைட்டில் வின்னர் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

No comments