Header Ads

பிக்பாஸ் இறுதி நேரத்தில் மனம் நொந்துபோன ரித்விகா! உருக வைத்த சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களில் தற்போது வரை பலரின் மனங்களை ஈர்த்த ஒருவர் என்றால் அது ரித்விகா தான்.

ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை பல முறை நாமினேட் ஆகி ஓட்டுக்கு வந்து மீண்டும் மீண்டும் ஜெயித்து தற்போது இறுதி மேடைக்கும் வந்துவிட்டார்.

பிக்பாஸிடம் அவரின் நடத்தைக்கு பாராட்டும் கிடைத்தது. கமல்ஹாசனும் அவரை பாராட்டினார்.

இந்நிலையில் அவர் இறுதி நேரத்தில் மிகுந்த மனவருத்தத்துடன் தான் செய்த தவறுகளை கூறினார்.



அதில் பலரும் பொன்னம்பலம் அண்ணாவை நாமினேட் செய்த போது யாஷிகா, ஐஸ்வர்யாவை முதன் முதலில் நாமினேட் செய்தது நான் தான்.

இதனால் அவர்கள் என்னிடம் பேசுவதை குறைத்துக்கொண்டனர். நாமினேட் செய்வது பிக்பாஸின் விதிமுறை. ஆனாலும் எனக்கு மனவருத்தம் தான்.



மேலும் டாஸ்க் விசயத்தில் டேனிக்கு மூன்று நாட்கள் சாப்பாடு கொடுக்காமல் இருந்ததும் எனக்கு சங்கடமாக இருந்தது. அதேவேளையில் பாலாஜி அண்ணா மீது குப்பை கொட்டிய போது நான் தடுக்கவில்லை.

அதுவும் தவறு தான். இதை நினைத்து நான் மிகுந்த மன வருத்த மடைந்திருக்கிறேன்.

No comments