Header Ads

நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால்.. தளபதி விஜய் அதிரடி பேச்சு

நடிகர் விஜய்யின் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்து வருகிறது. அதில் தளபதி விஜய் தற்போது பேசிவருகிறார்.

"என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா.. நண்பிகள்.. என் நெஞ்சில் குடியிருக்கும் சொல்லி ரொம்ப நாள் ஆச்சு. என படத்தின் வெற்றிக்கு கிடைக்கும் சந்தோசம், அதற்கு காரணமான ரசிகர்களை பார்க்கும்போது கிடைக்கிறது. அதற்காகவே உங்களை பார்க்க இந்த மாதிரி ஆடியோ விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறது" என்றார் விஜய்.



சர்கார் படத்திற்கு ரகுமான் கிடைத்ததை பற்றி பேசிய அவர் ரகுமான் கிடைத்தது படத்திற்கு ஆஸ்கார் கிடைத்த மாதிரி என கூறியுள்ளார்.

மேலும் முருகதாஸ் பற்றி பேசிய அவர் "மெர்சல்ல கொஞ்சம் அரசியல் இருந்துச்சு.. சர்கார்ல அரசியல வெச்சு மெர்சல் பன்னிருக்காரு" என விஜய் கூறியுள்ளார்.

மேலும் சர்காரில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என கூறியுள்ள அவர் "நான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால் முதலமைச்சரா நடிக்க மாட்டேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்" என கூறியுள்ளார்.

No comments