Header Ads

மணிரத்னம் வெற்றி 'இடைவெளி' மாறுமா ?

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த எட்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த 'ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை' ஆகிய படங்களில் 'ஓ காதல் கண்மணி' படம் மட்டுமே வெற்றிப் படமாக அமைந்தது. மற்ற மூன்று படங்களுமே எதிர்பாராத தோல்வியைத் தழுவியது.


சினிமாவில் அறிமுகமாகி 25 வருடங்களுக்கு மேலானலும் அந்தந்த காலகட்டங்களுக்கேற்ப இளைஞர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான படங்களைக் கொடுப்பதையே வழக்கமாக வைத்திருப்பவர் மணிரத்னம். ஆனாலும், அந்தத் தோல்விகள் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

பெரும்பாலும் சொந்தப் படங்களையே அவர் தயாரிப்பதால் அவருக்கு பிரச்சினையில்லை.



தமிழில் முதல் முறையாக புதிய கூட்டணி முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போது அதிகமாகியுள்ளது.

இப்படத்திற்கான முன்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. சிறப்புக் காட்சிகள் அதிகாலை 5 மணிக்கே நடைபெற உள்ளன. சிம்பு, விஜய் சேதுபதி படத்தில் இருப்பதால் படத்திற்கான முன்பதிவும் எதிர்பார்ப்பைவிட நன்றாகவே உள்ளதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய பழைய வெற்றியை மணிரத்னம் மீண்டும் இந்தப் படம் மூலம் பெறுவாரா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

No comments